Sunday, 13 July 2014

அப்பிச்சியின்  இறப்பு எங்கள் குடும்பத்திற்கே பேரிழப்பு !!!!!!!!!

                      நாங்கள் அனைவரும் அப்பிச்சியை மிகவும் இழக்கிறோம் .அவர் இறந்த விதம் மறக்க முடியாதது.
                       அவர் இறந்த நாள் நடந்ததை நான் கூறுகிறேன்......
                "அன்று காலை 09.30 மணி அளவில் அம்மிச்சியிடம் தோசை கேட்டு வங்கி சாப்பிட்டார்.அவருக்கு எங்க மாமாக்கு குழந்தை இல்லை என்ற ஏக்கமும் மற்றும் எங்களுக்கு நிலையான ஒரு இல்லறம் இல்லை என்ற கவலையும் கலந்து வருத்தியது.அவர் பல முறை இறப்பதற்காக முயற்சித்தார்.ஆனால் பலர் அதை கண்டதால் தடுத்தனர்.ஆனால் அந்த முறை யாராலும் தடுக்க இயலவில்லை.இதை நான் எதற்கு கூறினேன் என்று பின்னர் அறிவீர்.அந்த தோசையை சாப்பிடும் அதற்கு எங்க அத்தை அரைத்த சட்னி வேண்டும் என்று கேட்டு வங்கி சாப்பிட்டுவிட்டு எழுந்து அம்மிச்சியிடம் பக்கத்தில் இருக்கும் எங்க பெரியம்மா(சரசு )வை அழைத்து விட்டு அம்மிச்சியையும் அவர்களையும் பேசவிட்டுவிட்டு அகன்றார்.ஆனால்  இதில் என்ன விசயமென்றால் அந்த சரசு பெரியம்மா அம்மிச்சியை அழைக்கவே இல்லை.
                    அங்கு இருந்து அன்றைக்கு அகன்றவர்தான் திரும்பா வரவே இல்லை.

' இந்த உலகத்தை விட்டே அகன்றார் '.

                               

அங்கிருந்து கிளம்பி பக்கத்தில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தை அடைந்தார்.அந்த ஸ்டேஷனில் வேலை பார்க்கும் காவலாளியிடம் ரயிலின் வருகை பட்டியலை கேட்டுருக்கிறார்.அந்த தண்டவாளத்தை ரயில்பெட்டி 10.45க்கு  அடையும் என்பதை அறிந்து அதனை அடைந்தார்.அங்கு ஆநிரைகளை மேய்த்து கொண்டு இருந்த மனிதனிடம் பேசிக்கொண்டே இருந்தார்.அந்த நிமிடம் ரயில் வருவதை அறிந்த அவன் ஆநிரைகளை விரட்ட சென்றான்.அதை அறிந்த அப்பிச்சி தண்டவாளத்தை நெருங்கினார்.அங்கே தண்டவாளத்தின் மீது தலை வைத்து படுத்துக்கொண்டார்.
                     ஆநிரைகளை விரட்டிக்கொண்டு திரும்பிய அவன்

 'அய்யோ ஐயா ரயில் வருது அங்க போகதிங்க !!!!!!!!!!!!'

என்று சப்தமிட்டான்.ஆனால் அது ஏதும் அவர் சாவை தடுக்கவில்லை . ரயில் அவர் தலை மீது ஏறி நசுக்கி சென்றது.அதை கண்ட அந்த மனிதன் உடனடியாக எங்கள் அம்மிச்சியிடம் தகவலை சொல்ல விரைந்தான்.அதை கேட்ட அவர்கள் அருகில் வசிக்கும் சரசு பெரியம்மாவிடம் அதை சொல்ல அதை பெரியம்மா,பெரியப்பாவிடம் சொல்லிவிட்டு,கரிகாலன் அண்ணாவிடம் அதை கூறினார்.
                       அன்று எங்கள் மாமாவும் அத்தையும்,அத்தையின் மாமா மகளுக்கு திருமண சடங்கு என்று சென்றவர்கள் அப்பொழுதுதான் திரும்பினார்கள்.இதி அறிந்ததும் மாமா உடனடியாக அம்மாக்கும்,எங்க பெரியம்மாகும் சொல்லிவிட்டு அப்பிச்சியின் உடலை பக்க விரைந்தார்.அவர் அங்கு செல்லும்போதே அத்தையின் அண்ணணன் அங்கே அருகில் கவுண்டர் மில்லில் வேலை செய்வதால் தகவல் அறிந்ததும் இடத்தை அடைந்தார்.அவர்கள் அங்கே வரும்போது அப்பிச்சி உயிர் அந்த பூத உடலை விட்டு நீங்காமல் மூளை துடித்துக்கொண்டு இருந்துருகிறது.பெத்த தகப்பனின் இந்த நிலைமையை பார்த்தால் எப்படி இருக்கும்.அதனால் மாமா முடியாமல் அங்கு இருந்து நகர்ந்தார்.பிரகாஷ் சித்தப்பாதான் பிரிந்துகிடந்த அப்பிச்சியின் உடலை சேர்த்து துணியில் வைத்து கட்டி இருக்கிறார்.
                       உடனே தகவல் அறிந்ததும் எங்க அப்பா,பெரியப்பா.மேலும் மற்ற உறவினர்கள் அனைவரும் இடத்தை அடைந்தனர்.கரிகாலன் அண்ணா இல்லத்தை அடைந்து அம்மிச்சியை அழைத்துக்கொண்டு அந்த இடத்திற்கு சென்றார்.ஒரு கணவனின் இந்த மனைவியால் பார்க்க இயலுமா?எனவே அம்மிச்சியை யாரும் அனுமதிக்காததால் இல்லத்தை நோக்கி சென்றார்.
பெரியம்மா அந்த இடத்திற்கு வந்தும் யாரும் அனுமதிக்கவே இல்லை.எனவே அவரும் இல்லத்தை  அடைந்தார்.எங்க அம்மா,மற்றும் அணைத்து உறவுகளும் அவர் இறந்து 30 நிமிடங்களுக்குள் இல்லத்தை அடைந்தனர்.
                     நான் அப்பொழுது 10ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன்.என்னை அழைத்து செல்ல எங்க சித்தப்பா அங்கே வந்தார்.என்னிடம் வா வீட்டுக்கு போகலாம் என்று சொல்லி அழைத்து வந்தார்.அப்புறம் வரும் வழியில் எனிடம் சொல்லிகிறார் 'உங்க அப்பிச்சிக்கு எங்கே ரயிலுல அடி பட்டுருச்சமா 'என்று.நான் அதை கேட்டதும் சற்றும் யோசிக்காமல் ஏதோ சின்ன அடியாகத்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.ஆனால் வீட்டுக்கு அருகில் வந்ததும் பந்தல்.சாமியான எல்லாம் போட்டு இறந்ததை பார்த்து திகைத்து அப்பிச்சியை கொண்டுவரும் வரை யார் என்னிடம் வந்து அழுதாலும்,அழுகையே வரவில்லை.மாலை 4.30 மணியளவில் அவரின் உடலை இல்லத்திற்கு எடுத்து வந்தனர்.
                  அதை பார்த்த எனக்கு அவரிடம் நான் பேசிக்கொண்டது விளையடிக்கொண்டது எல்லாம் நினைவில் வரவர அழுகையை கட்டுபடுத்த முடியவில்லை.அவர் இருந்த பின் அவர் உடலை பார்க்க கூட முடியவில்லை என்று எங்களுக்கு கவலை வாட்டியதால் அனைவரும் குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர் என்று அனைவரும் அப்படி அழுதனர்.அவரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் .அவரின் மறைவு அனைவருக்கும் மிகுதியான இழப்பை ஏற்படுத்தியது.
                    அவர் இறந்து 16 நாளும் தினமும் அவருக்கு சாமி கும்பிட 50க்கும் மேலாக ஆட்கள் வருகை தந்தனர்.அந்த அளவுக்கு உறவுகள் இடத்தில அவர் நிறைந்து இருக்கிறார்."
                     அவர் இறந்த பின்பும் இன்று வரை அவரை நினைத்தால் எங்கள் அனைவருக்கும் வரும் கண்ணீரை துடைக்க இரு கரங்கள் போதாது.அவருக்கு என் மீதும் எங்க அக்கா சிந்து மீதும் பாசம் அதிகம்.அவர் ஆசை ஏன் மீது என்னவென்றால் எங்கள் நான் வாழ்வில் எதாவது செய்து சாதிக்கவேண்டும் என்பதே.அவரின் ஆசைப்படி அவர் இறந்து ஒரு வருடம் ஆவதற்குள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி பள்ளியிலே முதல் மதிப்பெண் எடுத்து அவரின் ஆசையின் முதல் படியை நிறைவேற்றினேன்.மேலும் வாழ்வில் சாதிக்க வேண்டும் என்று அதற்கான படிகளை ஏறிக்கொண்டு இருக்கிறேன்.கூடிய சீக்கிரத்தில் அதையும் இதில் இணைப்பேன்.

                  என்றும் எங்கள் அனைவரின் நினைவில் வாழும் (அமரர்) திரு.செ.இராமசாமி.அவரின் ஆசையை நிறைவேற்றுவேன்.  

Thursday, 10 July 2014

         அனைவரும் வாழ்க வளமுடன் என்னுடன் இதில் கலந்து கொள்ளுங்கள் !!!!!!!

          என்னுடைய அப்பா மற்றும் அம்மா (சண்முகசுந்தரம் மற்றும் சாந்தாமணி )-க்கு அடுத்து ,என் வாழ்வில் நிறைய நபர்களை சந்தித்தித்து இருக்கிறேன் அதில் என் வாழ்க்யை புரியவைத்தவர்கள் சிலரே ..........
பெயர்கள் :

1.(அமரர் )இராமசாமி-பச்சியம்மாள்,
2.சதாசிவம்-சித்ரா ,
3.கரிகாலன்-சரண்யா ,
4.சுரேஷ்பாரதி
5.காவியா 

என் வாழ்க்கையின் மொழி 

          இவர்களில் எனக்கு உறுதுணையாக என் வாழ்க்கையில் நடந்த  அனைத்து விசயங்களை நான் பகிர்ந்துகொண்டது என் அண்ணி சரண்யா மற்றும் என் தோழி காவியா .......எனோட வாழ்கைல நெறைய சமயத்துல நான் சரியான முடிவு எடுக்கறக்கு முண்ணாடி இவங்க ரெண்டு பேரு கிட்டையும் கேக்கமா எடுக்கறது இல்ல........நான் சரண்யா அண்ணி கூட 10th  படிக்கும் போது இருந்துதான் பேச ஆரம்பிச்சேன் .அவங்க எனக்கு நெறைய விசயத்துல உதவி பண்ணிருகாங்க ......அவங்க சொல்லி சொல்லிதான் நெறைய பெற பத்தி நான் தெரிஞ்சுட்டேன்......அப்பரோதான் அவங்கள பத்தி தெரிஞ்சுது....அவங்க சொல்லிதான்  கரிகாலன் அண்ணா பத்தி எதுமே தெரிஞ்சுது ...அண்ணா கூட நான் பேசவே மாட்டேன் ஏன் என்றால் அண்ணாவ பாத்தாலே ரொம்ப பயமா இருக்கும்.....அதுனால பேசமாட்டேன்.....அப்பரோ அண்ணி ஏன் கூட நல்ல பேச ஆரம்பிச்ச அப்பரோதான் அண்ணா பத்தி புரிஞ்சு பயந்துகாம பேச ஆரம்பிச்சேன்.....
              அடுத்து என் வாழ்க்கைல வந்தது காவியா அவள நான் காலேஜ் சேர்ந்த முதல் நாள் இருந்தே ஒரு  நல்ல இணைப்பு ஏற்பட்டுச்சு ...அதுல இருந்து நான் ஒரு குறிக்கோள் ஒட தான் இருக்கிறேன் .....அவள கண்டிப்பா கடைசி வரைக்கும் நல்ல தோழிய  அப்பரோ நல்ல ஓரு "               "(அதா நான் அப்பரோ fill  பண்றேன் ) வெக்க ஆசைபடுகிறேன் ....அவள் என் கிட்ட நல்ல பேசுனாலும் பழைய கதை அவள் வாழ்க்கைல நடந்துருக்குது அதுனால அவள் யாருகூடயும் நட்பாக பழக பயப்படற .......but,நான் அவள் கிட்ட ஒரு சவால் போட்டுருக்கேன் கண்டிப்பா நான் மூன்று வருசம் முடிஞ்சும் கோடா இருப்பேன் அப்படினு...அது பொய் ஒன்றும் இல்லை...கண்டிப்பா அப்படித்த இருப்பேன்....அவள் மேல ஒரு படி தோழி அப்படிங்கறதுக்கு மேல என்னமோ இருக்கு அதை சொல்ல தெரில.....ஆனால் காவி யை எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும் ஆனா இடைல கொஞ்ச நாள் ரெண்டு பெரும் பாதுட்டதே இல்ல....அப்பரோ காலேஜ் வந்ததுக்கு அப்பரோ ஒரே கலக்கல்தான் நாங்க ரெண்டு பேரும் ......
                   காவி சொல்ல ஆரம்பிச்சுதான்  பாரதி அண்ணாவ தெரியும்....அண்ணாவோட எல்ல செயல்களும் அப்படியே கரிகாலன் அண்ணா செய்யறமாதிரி செய்வாரு....அண்ணா கிட்டயும்  I GOT SO  MUCH  OF VALUABLE FACTS.......சுரேஷ்பாரதி அண்ணா,கரிகாலன் அண்ணா இவங்க ரெண்டு பேரு கூடயும் பேச ஆரம்பிச் அப்பரோதான் நான் ஏன்தான் தனிய பிறந்தேனோ இப்படி ஒரு அண்ணா நமக்கு சொந்தமா கூட பிறக்கமா போய்டாங்கலே அப்படின்னு மனசு கஷ்ட பட்டு அழுதுருக்கேன் .......ஆனா இவங்க ரெண்டு பெரும் அப்பரோ என் சொந்த அண்ணாவா ஆய்ட்டாங்க ......அன்னைல இருந்து இன்னைவரைக்கும் இவங்க ரெண்டு பேரும்தான் என்னோட சொந்த அண்ணா....

                    இவங்கள  எல்லாரைரயுமே என் வாழ்க்கைல கடைசி முச்சு இருக்கற வரைக்கும் மறக்க மாட்டேன்.....