அப்பிச்சியின் இறப்பு எங்கள் குடும்பத்திற்கே பேரிழப்பு !!!!!!!!!
நாங்கள் அனைவரும் அப்பிச்சியை மிகவும் இழக்கிறோம் .அவர் இறந்த விதம் மறக்க முடியாதது.
அவர் இறந்த நாள் நடந்ததை நான் கூறுகிறேன்......
"அன்று காலை 09.30 மணி அளவில் அம்மிச்சியிடம் தோசை கேட்டு வங்கி சாப்பிட்டார்.அவருக்கு எங்க மாமாக்கு குழந்தை இல்லை என்ற ஏக்கமும் மற்றும் எங்களுக்கு நிலையான ஒரு இல்லறம் இல்லை என்ற கவலையும் கலந்து வருத்தியது.அவர் பல முறை இறப்பதற்காக முயற்சித்தார்.ஆனால் பலர் அதை கண்டதால் தடுத்தனர்.ஆனால் அந்த முறை யாராலும் தடுக்க இயலவில்லை.இதை நான் எதற்கு கூறினேன் என்று பின்னர் அறிவீர்.அந்த தோசையை சாப்பிடும் அதற்கு எங்க அத்தை அரைத்த சட்னி வேண்டும் என்று கேட்டு வங்கி சாப்பிட்டுவிட்டு எழுந்து அம்மிச்சியிடம் பக்கத்தில் இருக்கும் எங்க பெரியம்மா(சரசு )வை அழைத்து விட்டு அம்மிச்சியையும் அவர்களையும் பேசவிட்டுவிட்டு அகன்றார்.ஆனால் இதில் என்ன விசயமென்றால் அந்த சரசு பெரியம்மா அம்மிச்சியை அழைக்கவே இல்லை.
அங்கு இருந்து அன்றைக்கு அகன்றவர்தான் திரும்பா வரவே இல்லை.
' இந்த உலகத்தை விட்டே அகன்றார் '.
![]() |
அங்கிருந்து கிளம்பி பக்கத்தில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தை அடைந்தார்.அந்த ஸ்டேஷனில் வேலை பார்க்கும் காவலாளியிடம் ரயிலின் வருகை பட்டியலை கேட்டுருக்கிறார்.அந்த தண்டவாளத்தை ரயில்பெட்டி 10.45க்கு அடையும் என்பதை அறிந்து அதனை அடைந்தார்.அங்கு ஆநிரைகளை மேய்த்து கொண்டு இருந்த மனிதனிடம் பேசிக்கொண்டே இருந்தார்.அந்த நிமிடம் ரயில் வருவதை அறிந்த அவன் ஆநிரைகளை விரட்ட சென்றான்.அதை அறிந்த அப்பிச்சி தண்டவாளத்தை நெருங்கினார்.அங்கே தண்டவாளத்தின் மீது தலை வைத்து படுத்துக்கொண்டார்.
ஆநிரைகளை விரட்டிக்கொண்டு திரும்பிய அவன்
'அய்யோ ஐயா ரயில் வருது அங்க போகதிங்க !!!!!!!!!!!!'
என்று சப்தமிட்டான்.ஆனால் அது ஏதும் அவர் சாவை தடுக்கவில்லை . ரயில் அவர் தலை மீது ஏறி நசுக்கி சென்றது.அதை கண்ட அந்த மனிதன் உடனடியாக எங்கள் அம்மிச்சியிடம் தகவலை சொல்ல விரைந்தான்.அதை கேட்ட அவர்கள் அருகில் வசிக்கும் சரசு பெரியம்மாவிடம் அதை சொல்ல அதை பெரியம்மா,பெரியப்பாவிடம் சொல்லிவிட்டு,கரிகாலன் அண்ணாவிடம் அதை கூறினார்.
அன்று எங்கள் மாமாவும் அத்தையும்,அத்தையின் மாமா மகளுக்கு திருமண சடங்கு என்று சென்றவர்கள் அப்பொழுதுதான் திரும்பினார்கள்.இதி அறிந்ததும் மாமா உடனடியாக அம்மாக்கும்,எங்க பெரியம்மாகும் சொல்லிவிட்டு அப்பிச்சியின் உடலை பக்க விரைந்தார்.அவர் அங்கு செல்லும்போதே அத்தையின் அண்ணணன் அங்கே அருகில் கவுண்டர் மில்லில் வேலை செய்வதால் தகவல் அறிந்ததும் இடத்தை அடைந்தார்.அவர்கள் அங்கே வரும்போது அப்பிச்சி உயிர் அந்த பூத உடலை விட்டு நீங்காமல் மூளை துடித்துக்கொண்டு இருந்துருகிறது.பெத்த தகப்பனின் இந்த நிலைமையை பார்த்தால் எப்படி இருக்கும்.அதனால் மாமா முடியாமல் அங்கு இருந்து நகர்ந்தார்.பிரகாஷ் சித்தப்பாதான் பிரிந்துகிடந்த அப்பிச்சியின் உடலை சேர்த்து துணியில் வைத்து கட்டி இருக்கிறார்.
உடனே தகவல் அறிந்ததும் எங்க அப்பா,பெரியப்பா.மேலும் மற்ற உறவினர்கள் அனைவரும் இடத்தை அடைந்தனர்.கரிகாலன் அண்ணா இல்லத்தை அடைந்து அம்மிச்சியை அழைத்துக்கொண்டு அந்த இடத்திற்கு சென்றார்.ஒரு கணவனின் இந்த மனைவியால் பார்க்க இயலுமா?எனவே அம்மிச்சியை யாரும் அனுமதிக்காததால் இல்லத்தை நோக்கி சென்றார்.
பெரியம்மா அந்த இடத்திற்கு வந்தும் யாரும் அனுமதிக்கவே இல்லை.எனவே அவரும் இல்லத்தை அடைந்தார்.எங்க அம்மா,மற்றும் அணைத்து உறவுகளும் அவர் இறந்து 30 நிமிடங்களுக்குள் இல்லத்தை அடைந்தனர்.
நான் அப்பொழுது 10ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன்.என்னை அழைத்து செல்ல எங்க சித்தப்பா அங்கே வந்தார்.என்னிடம் வா வீட்டுக்கு போகலாம் என்று சொல்லி அழைத்து வந்தார்.அப்புறம் வரும் வழியில் எனிடம் சொல்லிகிறார் 'உங்க அப்பிச்சிக்கு எங்கே ரயிலுல அடி பட்டுருச்சமா 'என்று.நான் அதை கேட்டதும் சற்றும் யோசிக்காமல் ஏதோ சின்ன அடியாகத்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.ஆனால் வீட்டுக்கு அருகில் வந்ததும் பந்தல்.சாமியான எல்லாம் போட்டு இறந்ததை பார்த்து திகைத்து அப்பிச்சியை கொண்டுவரும் வரை யார் என்னிடம் வந்து அழுதாலும்,அழுகையே வரவில்லை.மாலை 4.30 மணியளவில் அவரின் உடலை இல்லத்திற்கு எடுத்து வந்தனர்.
அதை பார்த்த எனக்கு அவரிடம் நான் பேசிக்கொண்டது விளையடிக்கொண்டது எல்லாம் நினைவில் வரவர அழுகையை கட்டுபடுத்த முடியவில்லை.அவர் இருந்த பின் அவர் உடலை பார்க்க கூட முடியவில்லை என்று எங்களுக்கு கவலை வாட்டியதால் அனைவரும் குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர் என்று அனைவரும் அப்படி அழுதனர்.அவரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் .அவரின் மறைவு அனைவருக்கும் மிகுதியான இழப்பை ஏற்படுத்தியது.
அவர் இறந்து 16 நாளும் தினமும் அவருக்கு சாமி கும்பிட 50க்கும் மேலாக ஆட்கள் வருகை தந்தனர்.அந்த அளவுக்கு உறவுகள் இடத்தில அவர் நிறைந்து இருக்கிறார்."
அவர் இறந்த பின்பும் இன்று வரை அவரை நினைத்தால் எங்கள் அனைவருக்கும் வரும் கண்ணீரை துடைக்க இரு கரங்கள் போதாது.அவருக்கு என் மீதும் எங்க அக்கா சிந்து மீதும் பாசம் அதிகம்.அவர் ஆசை ஏன் மீது என்னவென்றால் எங்கள் நான் வாழ்வில் எதாவது செய்து சாதிக்கவேண்டும் என்பதே.அவரின் ஆசைப்படி அவர் இறந்து ஒரு வருடம் ஆவதற்குள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி பள்ளியிலே முதல் மதிப்பெண் எடுத்து அவரின் ஆசையின் முதல் படியை நிறைவேற்றினேன்.மேலும் வாழ்வில் சாதிக்க வேண்டும் என்று அதற்கான படிகளை ஏறிக்கொண்டு இருக்கிறேன்.கூடிய சீக்கிரத்தில் அதையும் இதில் இணைப்பேன்.

